மரியசீலன்-திலைக்ஸ்
வடமராட்சி நிருபர்
பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் நோயாளர் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

பல நாட்களாக குறித்த இருக்கைகள் சரி செய்யப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுவதால் மருத்துவம் பெற வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாவதை அவதானிக்க முடிகின்றது
அதிகளவானோர் இருக்கைகள் இன்றி நின்ற நிலையில் பல மணிநேரம் காத்து நின்று தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
பல நாட்களாக கேட்பாரற்று உடைந்த நிலையில் காணப்படும் மந்திகை வைத்தியசாலையின் நோயாளர் இருக்கைகளை சீர் செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


