Thursday, March 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அல்பேனியா நாட்டு பெண்ணை, நாடு கடத்த பிரித்தானியா முடிவு!

அல்பேனியா நாட்டு பெண்ணை, நாடு கடத்த பிரித்தானியா முடிவு!

வெளிநாடொன்றில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணொருவர் பிரித்தானியாவுக்குத் தப்பி வந்த நிலையில், அவரை நாடுகடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

2019ஆம் ஆண்டு, அல்பேனியா நாட்டவரான லைரீ டெலிஷி 25 வயது என்னும் பெண், அந்நாட்டின் தலைநகரான Tiranaவிலிருந்து ரோமுக்கு போலி ரொமேனியா பாஸ்போர்ட் மூலம் பயணிக்க முயன்றபோது சிக்கினார்.

பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு தப்பி வந்து தன் கணவர் பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில், அல்பேனியா அதிகாரிகள் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள முயற்சி செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், அவரை நாடுகடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையிலும், அவரது கணவரும் மூன்று பிள்ளைகளும் அவரைப் பிரிந்து பிரித்தானியாவில் வாழும் நிலை உருவாகியிருந்தாலும், சர்வதேச நாடுகடத்தல் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் பிரித்தானியாவுக்கு உள்ளது என வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments