Saturday, March 14, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விஜய் வீடு மற்றும் இலங்கை தூதரகம் மீது வெடிகுண்டு மிரட்டல்!

விஜய் வீடு மற்றும் இலங்கை தூதரகம் மீது வெடிகுண்டு மிரட்டல்!

 

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி காவல்துறை அதிகாரி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஆகிய அலுவலகங்களுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தூதரகங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments