Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை

சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை

தெஹிவளையில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சீன நாட்டவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டு குழு ஒன்று அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் கட்டிடத்தின் மேல் தளங்களில் ஒன்றிலிருந்து விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments