நமது நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை தூய்மையாக்கும் பணி இன்று எல்லங்குளம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.
எல்லங்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் HNBC பண்டார தலமையிலான இராணுவ அதிகாரிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். கழிவுகளை பருத்தித்துறை பிரதேச சபை உழவு இயந்திரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டன.


