புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை இலக்கு வைத்து, யுக்ரைன் இன்று ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது.
ரஷ்யாவின் கெர்சான் பிராந்தியத்தில் உள்ள விடுதியொன்றில் இன்று புத்தாண்டை முன்னிட்டு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களை இலக்கு வைத்து யுக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தமது அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே யுக்ரைன் அனுப்பிய 168 ஆளில்லா விமானங்களை, தாம் தாக்கி அழித்ததாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.


