Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல்ல விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவம் - உலங்குவானூர்திகள் தயார் நிலையில்!

எல்ல விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவம் – உலங்குவானூர்திகள் தயார் நிலையில்!

எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் கீழ், இராணுவ வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விஜயபா காலாட்படை பிரிவு, கமுனு ஹேவா இராணுவ படையணி மற்றும் கமாண்டோ படைப்பிரிவு உட்பட கிட்டத்தட்ட 200 இராணுவ வீரர்கள், நேற்று இரவு முதல் தற்போது வரையில் அவசரகால மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரைகிலோமீட்டர் மேலே கொண்டு வருவது மிகவும் கடினமான பணிக இருந்த தும் இராணுவத்தினர் உதவியுடன் மக்களை மீட்டு நோயாளர் காவு வாகனங்கள் முலம் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் இராணுவத்தினரால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக தியதலாவ விமானப்படையானது, எம்.ஐ.17 உலங்குவானூர்தியையும், வீரவில விமானப்படை தளத்தில் பெல் 412 உலங்குவானூர்தியையும் தயார் நிலையில் வைத்துள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்களை உலங்குவானூர்திகள் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்ல, அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதற்காக இவை தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு
தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments