தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. உயர்தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
இலங்கையை பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.


