Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அமரர் யூட்மெரின் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்

அமரர் யூட்மெரின் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்

நமது நிருபர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீதி விபத்தில் அகால மரணம் அடைந்த வடமராட்சி கிழக்கின் சிறந்த உதைபந்தாட்ட வீரனும் சிறந்த நடுவருமாகிய அமரர் எட்வேட் யூட்மெரின் நினைவாக வடமராட்சிக் கிழக்கு உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தால் உதைபந்தாட்ட தொடர் நடாத்தப்படுகிறது.

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கி விலகல் முறையில் இந்த போட்டி தொடர் நடாத்தப்படுகிறது.

யூட்மெரின் உதைபந்தாட்ட போட்டி தொடரின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணி அளவில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

மங்கள விளக்கேற்றப்பட்டு அமரர் யூட்மெரின் திருவுருவப்படத்திற்கு அவரது உறவுகளால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வீரர்கள், விருந்தினர்கள், ரசிகர்கள், உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடரின் முதலாவது போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது

இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக உடுத்துறை கிராம அலுவலர்,கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர், வடமராட்சி கிழக்கு கழகங்களின் தலைவர், செயலாளர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இன்று இடம் பெற்ற ஐந்து போட்டிகளில் கொடுக்குழாய் சக்திவேல்,ஆழியவளை அருணோதயா, மருதங்கேணி கணேசானந்தா, கட்டைக்காடு சென்மேரிஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்

தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் நாளை காலை 08.30 மணி அளவில் செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments