Wednesday, March 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வயலின் ஏலத்தில்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வயலின் ஏலத்தில்!

புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குச் சொந்தமான வயலின் பிரித்தானியாவின் டொமினிக் வின்டர் ஏல நிறுவனம் மூலம் விற்பனைக்கு வரவுள்ளது.

1894 ஆம் ஆண்டு மியூனிக் லூதியர் அன்டன் ஜுன்டெரர் தயாரித்த இந்த வயலின், 300,000 வரை விற்கப்படலாம் என ஏல நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இது தான் ஐன்ஸ்டீன் முதன்முதலில் வாங்கிய வயலின் எனவும், தனது பதின்ம வயதின் இறுதிப்பகுதி மற்றும் இளமை பருவத்தின் ஆரம்பத்தில் இதை வாசித்திருப்பார் என்றும் கருதப்படுகிறது. அந்தக் காலகட்டத்திலேயே அவர் தனது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை உருவாக்கத் தொடங்கியிருந்தார்.

1932 ஆம் ஆண்டு நாஜிக்களின் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க ஐன்ஸ்டீன் ஜெர்மனியை விட்டு அமெரிக்கா சென்றபோது, தனது நண்பரும் சக ஊழியருமான மேக்ஸ் வான் லாவுக்கு வழங்கிய பொருட்களின் தொகுப்பில் இந்த வயலின் அடங்கியது.

அந்தச் சேகரிப்பில், அவரது சைக்கிள் ஆசனமும், 1843ஆம் ஆண்டின் டெஸ்கார்ட்ஸ் மற்றும் ஸ்பினோசா பற்றிய தத்துவப் புத்தகமும் அடங்கியிருந்தன. 1952 ஆம் ஆண்டு வான் லாவ் இந்த பொருட்களை மார்கரெட் ஹோம்ரிச்சிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து அவை அவரது குடும்பத்திலேயே பாதுகாக்கப்பட்டு வந்தன.

இப்போது ஹோம்ரிச்சின் கொள்ளுப் பேத்தி, அந்தப் பொருட்களை ஏலத்திற்காக கொண்டு வந்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments