Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விஜய்யை விட நடிகர் அஜித் வந்தால் இன்னும் கூட்டம் வரும் - சீமான்

விஜய்யை விட நடிகர் அஜித் வந்தால் இன்னும் கூட்டம் வரும் – சீமான்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை ஆரம்பித்தார்.

அதன்படி, நேற்று காலை நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார்.

இதையடுத்து, விஜய் பிரசாரத்துக்காக வடிவமைக்கப்பட்ட நவீன ரக பேருந்தில் ஏறி, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்:-

இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம்.சச்சினுக்கு விருது தரும் போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை தான்.

திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும்.

நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Ajith seeman crowd Vijay

மேலும் வாசிக்க >>

“இளையராஜா அதிசய மனிதர்” – ரஜினிகாந்த் உருக்கம்

பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் சேர முடியாது!

விஜய் பிரசாரத்தில் மைக் குழப்பம்!

“யானை காணவில்லை” வினோத புகார்!

நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்- விஜய்

ரயில் நிலையத்தில் நடனமாடிய இந்திய சுற்றுலாப்பயணிகள்!

ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருள் மித்தேனியாவில் கண்டுபிடிப்பு

நான்கு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

Suryakumar Yadav, Salman Ali Agha Avoid Handshake At Toss In Asia Cup Clash: Watch

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments