Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அடம்பன் ஆண்டாங்குளம் பிரதான வீதியில் விபத்து

அடம்பன் ஆண்டாங்குளம் பிரதான வீதியில் விபத்து

மன்னார் நிருபர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (6) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த குறித்த கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,மரத்துடன் மோதி பின்னர் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி உள்ளது.

இதன் போது குறித்த கெப் ரக வாகனத்தை செலுத்தி வந்தவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் ரக வாகனம் சேத மடைந்துள்ளதோடு, மோட்டார் சைக்கிலும் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments