Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கடலில் நீராடிய இளைஞன் மாயம்!

கடலில் நீராடிய இளைஞன் மாயம்!

நமது நிருபர்

யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேற்று(28) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.

கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளைஞனுடன் நீராடிய மேலும் இருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து மருதங்கேணி பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments