தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாரி கொண்டிருக்கிறார். விஜய்யின் வீடு சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ளது.
நேற்று மாலை இந்த வீட்டுக்குள் மர்மமான முறையில் நுழைந்த வாலிபர் ஒருவர் , மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடியில் வாலிபன் இருப்பதை பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் பார்த்து, உடனடியாக அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 04 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வேளச்சேரியில் உள்ள தந்து சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர் எப்படி விஜய் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்றார்.? என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்துள்ள பொலிஸார் இஅவர் குறித்து விசாரணை நடத்தினயுள்ளனர். அப்போது அவர், விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விஜய் வீட்டில் வாலிபர் நுழைந்தது எப்படி.? என காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்வபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


