Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீப்பிடித்து சாம்பலானது!

நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீப்பிடித்து சாம்பலானது!

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் இன்று (13) அதிகாலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

முச்சக்கரவண்டியின் உரிமையாளர், தெகிந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எரிபொருள் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments