இலங்கை மத்திய வங்கி தனது 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி 2000 ரூபாய் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.
புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதற்கும், விநியோகிப்பதற்கும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தங்கள் பணம் கையாளும் இயந்திரங்களை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த செயல்முறையின் முன்னேற்றத்துக்கமைவாக, புதிய நாணயத்தாள் படிப்படியாக புழக்கத்தில் வரும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


