Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மன்னாரில் மக்களுக்கு ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு

மன்னாரில் மக்களுக்கு ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு

நமது நிருபர்

தற்போது இலங்கையில் காணப்படுகின்ற காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் கட்டையடம்பன், இசை மழை தாழ்வு, முருங்கன் உள்ளிட்ட கிராம மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் இன்று(30) வழங்கப்பட்டன.

கடந்த இரு தினங்களாக நாட்டில் காணப்படும் மழையின் காரணமாக இசை மழை தாழ்வு கிராமம் முற்றிலும் நீரில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை அவசரமாக வழங்க முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரை கமைய சமாதான தூதரும்,மனித உரிமை செயற்பாட்டாளருமான ஷேக் அமானி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.

மிகவும் அவசர தேவை நாடியுள்ள மக்களுக்கு இப் பொருட்களை கொண்டு செல்ல தேவையான வாகன வசதியை மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments