கொழும்பு – குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது பாரவூர்தி யுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


