வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் டி20 தொடர் நடைபெறுகிறது. டி20 தொடர் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி விவரம்: லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், ஆபிப் ஹொசைன், மெஹதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, ஷேக் மெஹதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சகிப், ஹசன் மஹ்மூத், ரிப்பன் மொண்டோல்.