Wednesday, January 8, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி!

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி!

“மீனவ சமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்” என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனியானது, முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபம் வரை இடம்பெற்றது.

குறித்த நடைபவனியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்திய இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவசட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவீரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்தல், கனிய மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணை வளர்ப்புத் திட்டங்களை நிறுத்துதல், காற்றாலை மின்சாரத் திட்டத்தைத் தடை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளைத் தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர்.

வன்னிபாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் உலக மீனவதின நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments