யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று 09/12/2024 அன்று 09/12/2024 திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
அக்கறையுடன் கூடிய ஊடகம் எனும் தலைப்பில் இடம் பெற்ற குறித்த பயிற்சிநெறியில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட சுமார் முப்பது வரையான ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர். இதில் வளவாளராக ஊடக ஆசிரியர் பிறேம் கலந்துகொண்டார்.