Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்டில்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவேரி மேலாண்மை ஆணையம்

டில்லியில் 30-ம் தேதி கூடுகிறது காவேரி மேலாண்மை ஆணையம்

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவேரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவேரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், காவேரி மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டம் டில்லியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 30-ந்தேதி கூடுகிறது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீர் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments