ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் சோபோரிலிருந்து தல்வாராவில் உள்ள பயிற்சி மையத்திற்குச அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 2 பேரும் பலியானார்கள். காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏகே-47 ரைபிள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் தொடங்கிய ஆய்வு: தீப மலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?
மேலும் இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு பலியாகியுள்ளனர். வாகனத்தில் பயணித்த போலீஸார் ஒருவர் காயமின்றி தப்பியதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் அதிகாரி அமோத் நாக்புரே தெரிவித்தனர்.
பலியானவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக உதம்பூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.