வறுமையை 15 வீதமாகக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனையாகும் உலக வங்கியின் அறிக்கையின்படி வறுமை தற்போது 26 வீதமாக உள்ளது. அதாவது மக்களில் 26 வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். நாளொன்றுக்கு கொள்வனவு திறன் 3.65 டொலர் என்ற குறிகாட்டியே இதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால், சர்வதேச குறிகாட்டி 6.85 டொலராகும். இந்தக் குறிகாட்டியை பயன்படுத்தினால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் 67 வீதமாக இருப்பர். அரசாங்கத்திடம் வறுமை ஒழிப்புக்கு அஸ்வெசும திட்டத்தை தவிர வேறு திட்டங்கள் பெரிதாக இல்லை.
வறுமை ஒழிப்பு என்பது கல்வி, சுகாதாரம் என்பவற்றின் அபிவிருத்தியுடன் கிராமிய அபிவிருத்தி போன்ற விடயங்களுடனும் தொடர்புப்பட்டது. தற்போது நடுத்தர வர்க்கத்திலிருந்த பலர் வறுமைக் கோட்டிற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.