சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது.
“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது.
இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன.
இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள்.


