Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ்ப்பாணம் குருநகர் கடலில் 183 கிலோ கேரள கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட படகு!

யாழ்ப்பாணம் குருநகர் கடலில் 183 கிலோ கேரள கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட படகு!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து 183 கிலோ கேரள கஞ்சாவுடன் டிங்கி படகொன்று இன்று புதன்கிழமை (04) கைப்பற்றப்பட்டது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் 92 கேரள கஞ்சா பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments