Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமதி மல்லிகா பிணையில் விடுதலை

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமதி மல்லிகா பிணையில் விடுதலை

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமதி மல்லிகாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் செயற்படுத்தப்பட்ட வேருஸ் ஆறு திட்டத்தில் 27.6 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments