இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் சுவிஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும், இந்த ஆண்டு தமிழ்த்தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது