Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுயேட்சை குழு உறுப்பினர்களுடன் பேரம் பேசும் அரசாங்கம் ; பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான

சுயேட்சை குழு உறுப்பினர்களுடன் பேரம் பேசும் அரசாங்கம் ; பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான

தேசிய மக்கள் சக்தி இவ்வாறான சுயேட்சை உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து அவர்களது ஆதரவை பெற்றுக் கொள்ள மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. ஆனால் களுத்துறை மாவட்டம் மத்துமக தொகுதியின் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த நால்வரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.

களுத்துறையில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்துகம தொகுதியில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து 13 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 10 உறுப்பினர்களும், சுயேட்சை குழுக்களிலிருந்து நால்வரும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். எனவே தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதற்கமைய சுயேட்சை குழுவின் தலைவர் கசுன் முனசிங்கவை தலைவராக நியமிப்பற்கும் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி இவ்வாறான சுயேட்சை உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து அவர்களது ஆதரவை பெற்றுக் கொள்ள மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தது.

எவ்வாறிருப்பினும் மத்துகம தொகுதியின் சுயேட்சை குழு அரசாங்கத்தின் பேரம் பேசலுக்கு விலை போகவில்லை.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தி முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்து இந்நாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்.

ஒரு சில மாதங்களில் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஒருபோதும் மீண்டும் இந்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments