Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ரெட்ரோ ஓடிடி தேதி!

ரெட்ரோ ஓடிடி தேதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 2டி என்டர்டெய்ன்மென்ட் – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

நடிகர் சூர்யா சினிமா வாழ்க்கையில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படமாக இந்தப்படமே இருப்பதாக அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments