கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், மின் உற்பத்தி நிறுவன நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு காரணமாக பாரிய அளவிலான அணு மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று இடங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2035 ஆம் ஆண்டை இலக்கு வைத்து இவ்வாறு மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாகாண சக்திவள அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார்.