மியன்மாரில் பூகம்பத்தினால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மண்டலாய் நகரிலும் இராணுவத்தினால் உருவாக்கப்பட்டநய்பிடாவ் நகரிலும் அவசரகால நிலைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சகைங்,மண்டலாய்,பகோ,மக்வே பிராந்தியங்களில் இராணுவஆட்சியாளர்ள் அவசரகாலநிலையை பிறப்பித்துள்ளனர்.
இதேவேளை தாய்லாந்தின் தலைநகரத்தினை அவசரகாலவலயமாக அறிவித்துள்ளதாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார் சினவா பூகம்பத்தினால் உருவான நிலையை அவசரகால நிலை என கருதி செயற்படுமாறு மாகாணங்களை கேட்டுக்கொண்டுள்ளார்,
பிரதமர் உடனடியா பாங்கொங்கிற்கு திரும்புகின்றார்,பொதுமக்கள் உயரமான கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,படிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பல அதிர்வுகளிற்கான ஆபத்துள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.