கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் டொரன்டோவின் பியர்சன் விமான நிலைய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பழமையான இயந்திர உபகரணங்களை பதிலீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவு போன்ற இயற்கை சீர்கேடுகளின் போது விமான நிலையத்தின் பணிகளை சீராக முன்னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் மிகவும் சன நெரிசல் மிக்க விமான நிலையமாக பியர்சன் விமான நிலையம் கருதப்படுகின்றது. வாரம் ஒன்றிற்கு சுமார் ஒன்பது லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். எனவே விமான நிலைய சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.