இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டம் கவுகாத்தியில் நாளை நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஜூன்- ஜூலையில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ஏ பிளஸ் கிரேடில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.