தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, ஓ.டி.டி.யில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது
பிரதீப் ரங்கநாதன் – மமிதா பைஜு நடிக்கும் புதிய படத்தின் பூஜை
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on