கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் கே.ரி.குருசுவாமி மற்றும் சமூக சேவகர் பழ.புஷ்பநாதன் ஆகியோர் தலைமையிலான சுயாதீனகுழு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மேற்படி மனுவானது ஜனாதிபதி சட்டத்தரணி பைசல் முஸ்தபா ஊடாக வியாழக்கிழமை(27)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கே.ரி. குருசுவாமி மற்றும் பழ புஷ்பநாதன் ஆகியோர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தேர்தல்கள் செயலகம் வேட்புமனுவை நிராகரித்திருந்தது.
இந்நிலையிலேயே தனது 113 வேட்பாளர்களுக்கும் நீதி கோரியும் தேர்தல்கள் செயலகத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தியும் சுயாதீனக் குழுவின் தலைவர் கே.ரி. குருசுவாமி மற்றும் இணைத்தலைவர் பழ புஷ்பநாதன் ஆகியோர் இணைந்து மேற்படி மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.