மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்ட போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஜோகாவ்தர் கிராமத்தில் உள்ள எல்லை அருகே செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது அசாம் பதிவு எண்ணைக் கொண்ட ஒரு காரை மடக்கி பிடித்து அதில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் வைக்கப்பட்டிருந்த தலையணை உறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 151.7 கிலோ கிராம் எடையுள்ள 12 ஹெராயின் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ. 1.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.