கொழும்பு – கண்டி வீதியில் கஜுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாரதியால் கவனக்குறைவாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.