Sunday, March 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐபிஎல்: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

ஐபிஎல்: சென்னை – பெங்களூரு போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . இதில் வருகிற 28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது . www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,700, முதல் ரூ.7,500 வரை நிர்ணயிக்கப்பட்டது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்த்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

இதனால் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 20 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முயற்சித்து ஏமாற்றம் அடைந்தனர் .

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments