கனடாவில் மாட்டு இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பாக மளிகை கடைகளில் மாட்டிறச்சியின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு மாட்டு இறைச்சியின் சில்லறை விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
பன்றி இறைச்சி
கடந்த சில ஆண்டுகளாகவே இவ்வாறு மாட்டு இறைச்சியின் விலை உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கோழி மற்றும் பன்றி இறைச்சி என்பனவற்றுடன் ஒப்பீடு செய்யும் போது மாட்டு இறைச்சியின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாட்டு இறைச்சி விலையின் அதிகரிப்பு வீதமும் உயர்வாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 13 டொலர்களாக காணப்பட்டதாகவும் இது ஓராண்டுக்கு முன்னதாக 11 டொலர்களாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.