2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா – உருகுவே அணிகள் மோதின .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியில் தியாகோ அல்மடா கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.