இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
“ஸ்ரேயாஸ் ஐயருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். டெல்லியில் நீண்ட காலமாக எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருந்தது. நான் பணியாற்றிய சிறந்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஒருவர். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் ஐ.பி.எல். கோப்பையை வென்ற கேப்டன். இதைவிட அதிகமாக எதையும் அவரிடம் கேட்க முடியாது.
சில நாட்களுக்கு முன்புதான் அவர் எங்களுடன் இணைந்தார். ஒரு கேப்டனாக அணியில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார். நாங்கள் ஒரு சிறந்த அணியை ஒன்றாக இணைத்துள்ளோம். எந்த அணியிலும் கேப்டன்-பயிற்சியாளர் உறவு மிக முக்கியமானது. அந்த வகையில் எங்களிடம் மிகவும் வலுவான பிணைப்பு இருப்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.