தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரவி மோகன். சமீபத்தில் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ரவி மோகன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் நடிப்பை தொடர்ந்து படம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரவி மோகன் மற்றும் யோகி பாபு இணையும் புதிய திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிகிறது. விரைவில், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on