Tuesday, March 10, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 'காதல் பெயில்' பாடல் வெளியீடு

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ‘காதல் பெயில்’ பாடல் வெளியீடு

நடிகர் தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்தார். ‘ராயன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் முதல் பாடலாக’கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் இரண்டாவது பாடலாக ‘காதல் பெயில்’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல் ஜென் இசட் சூப் பாடலாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments