இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டது, ஆனால் கலிஃபோர்னியாவில் இன்னமும் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்க தேர்தல் முறையை விமரிசித்திருக்கிறார் தொழிலதிபர் எலான் மஸ்க்.
டெஸ்லா நிறுவன தொழிலதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் இது பற்றிய இடுகையை பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நம்முடைய முறை உடைந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது, எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் ஒரு பதிவுக்கு பதிலளித்து எலான் மஸ்க் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், இந்தியாவில் 64 கோடி வாக்குகள் ஒரு நாளில் எண்ணப்பட்டுவிட்டன.
அர்ஜென்டினாவில் 2.7 கோடி வாக்குகள் 6 மணி நேரத்தில் எண்ணப்பட்டுள்ளன.
லேக் கவுண்டி, கலிஃபோர்னியாவில். வெறும் 25 ஆயிரம் வாக்குகள் 19 நாள்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு வருகிறது என்று பதிவிடப்பட்டிருக்கும் எக்ஸ் பதிவுக்குத்தான் எலான் மஸ்க் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்தியாவில்..
இந்தியாவில், மக்களவைத் தேர்தல் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 64 கோடி பேர் வாக்களித்திருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் பதிவான வாக்குகள் ஒரு நாளில் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது 2000-ஆவது ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகி