Sunday, November 29, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இத்தாலி பாடசாலைகளில் புர்கா- நிகாப் அணியத் தடை!

இத்தாலி பாடசாலைகளில் புர்கா- நிகாப் அணியத் தடை!

ஐரோப்​பிய நாடான இத்​தாலி​யில் கடந்த செப்​டம்​பரில் பிரதமர் மெலோனியின் அறிவிப்பின் படி ‘பாடசாலைகளில் புர்கா – நிகாப் அணிவதற்கு தடை விதிக்​கப்​படும். “இது பாது​காப்பு தொடர்​பான நட​வடிக்கை ஆகும். ஒரு பெண் அல்​லது ஒரு சிறுமி முகத்தை மறைக்க கட்​டாயப்​படுத்​து​வது அவரது அடிப்​படை உரிமை​களை மீறும் செயல்’ என அவர் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பாடசாலைகளில் புர்கா- நிகாப் அணிய தடை விதிக்​கும் சட்​ட மசோதா இத்​தாலி பாராளு​மன்​றத்​தில் நிறைவேற்றப்​பட்​டுள்ளது.

புதிய சட்​டத்​தின்​படி இத்​தாலி பாடசாலை​களில் புர்கா நிகாப் அணிவதற்கு தடை விதிக்​கப்​பட்டுள்​ளது.

தடையை மீறினால் 1000 யூரோக்​கள் வரை (ரூ.1 இலட்​சம்) அபராதம் விதிக்​கப்​படும். புதிய நடைமுறை வரும் 2027-28-ம் கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது.

ஐரோப்​பிய நாடான இத்​தாலி​யில் பிரதமர் ஜார்​ஜியோ மெலோனி தலை​மையி​லான அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது.

அந்த நாட்​டில் 5.88 கோடி மக்​கள் வசிக்​கின்​றனர். இதில் 74.5 %பேர் கத்​தோலிக்க கிறிஸ்தவ மதத்​தைப் பின்​பற்​றுகின்​றனர். 15.3 % பேருக்கு கட​வுள் நம்​பிக்கை இல்லை. இதர கிறிஸ்தவ பிரிவு​களை சேர்ந்த 4.1 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள் 3.7% பேர், இதர மதங்​களை சேர்ந்த 2.2 பேர் வசிக்​கின்​றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments