Saturday, November 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இ.போ.ச பேருந்து மீது பாறை விழுந்த சம்பவம்!

இ.போ.ச பேருந்து மீது பாறை விழுந்த சம்பவம்!

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் மலை உச்சியிலிருந்து பாறை ஒன்று விழுந்ததில் பயணி ஒருவர் படுகாயமடைந்து, கினிகத்தென பிரதேச வைத்தியசாலைக்க கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து இன்று (28.11.2026) பிற்பகல் சுமார் 2:30 மணியளவில், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தென கலுகல பொலிஸ் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.

பேருந்தின் மீது பாறை விழுந்து தரையில் சரிந்ததில், இருக்கையில் அமர்ந்திருந்த பயணி படுகாயமடைந்தார். காயமடைந்தவர், பொல்பிட்டிய-கலுகல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பேருந்து பயணிகளால் வைத்தியசாலைகளில் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

ஹட்டன் பணிமனைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

மேலும், பொல்பிட்டிய பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாறை உருண்டு பேருந்தின் மீது விழுந்திருக்கலாம் என விபத்து குறித்து விசாரணை நடத்தும் பொல்பிட்டிய பொலிஸhர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர், அகரபத்தனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான முட்டன் சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments