Friday, November 27, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்உலக செஸ் சாம்பியன்ஷிப்: மூன்றாவது ஆட்டத்திலும் சமநிலை செய்த குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மூன்றாவது ஆட்டத்திலும் சமநிலை செய்த குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்திலும் இந்திய வீரர் டி. குகேஷ், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜாவோகிர் சிண்டரோவுடன் சமநிலை செய்துள்ளார்.

தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதுடன், குகேஷின் சிறப்பான நகர்வுகளால் சிண்டரோவுக்கு நேர நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இருவரும் வெற்றிக்காகப் போராடிய நிலையில், 60 நகர்வுகளுக்குப் பின்னர் ஆட்டத்தை சமநிலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதன் மூலம் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். அடுத்த ஆட்டத்தில் குகேஷ் வெள்ளைக் காய்களுடன் விளையாடவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments