Wednesday, November 25, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்

ஒரு நாளைக்கு 1,000 வேலைவாய்ப்புகள்

ஒரு நாளைக்கு 1000 வேலைவாய்ப்புகள் என்ற இலக்குடன் 200 நாட்களில் 2 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 58,214 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 65,786 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 75 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதில் 50 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னைக்கு வெளியே புதிய ஆலைகளை நிறுவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 15,250 கோடி முதலீட்டில் 12 பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

பிரேசிலைச் சேர்ந்த WEG நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் ரூ. 2,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் RAANA SEMICONDUCTORS நிறுவனம் ரூ. 50 கோடி முதலீடு செய்கிறது.

மேலும் Hwashin Automotive India Private Limited நிறுவனத்துடன் ரூ. 850 கோடிக்கும் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனத்துடன் ரூ. 250 கோடிக்கும் ராயல் என்பீல்ட் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரூ. 2,000 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments