Monday, November 16, 2026
spot_img
Homeகனடா செய்திகள்வெள்ளத்தால் சேதமடைந்த பனிச்சறுக்கு மையம்

வெள்ளத்தால் சேதமடைந்த பனிச்சறுக்கு மையம்

மனிடோபா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Asessippi பனிச்சறுக்கு மையத்தை, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மீண்டும் திறப்பதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க சுமார் 2.1 மில்லியன் கனேடிய டொலர்கள் தேவைப்படுவதாக நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

புதிய Pump House கட்டுமானம், மின்சார விநியோகத்தை மீளமைத்தல் மற்றும் பனிச்சறுக்கு பாதைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எனினும், புதிய மின்மாற்றியை நிறுவுவதற்கு டிசம்பர் 18ஆம் திகதியையே Manitoba Hydro நிறுவனம் வழங்கியுள்ளதால், திட்டமிட்ட நேரத்தில் மையத்தைத் திறப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாகாண அரசாங்கத்திடம் அவசர நிதியுதவியும் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பநிலை முதல் நிபுணத்துவ நிலை வரையிலான 26 பனிச்சறுக்கு பாதைகளைக் கொண்டுள்ள இந்த மையத்திற்கு, எதிர்வரும் பருவத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தருவதற்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, குளிர்கால விடுமுறைக்கு முன்னதாகப் பனிச்சறுக்கு மையத்தை மீண்டும் திறக்க நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments